சினிமாமருத்துவம்

பிரபல தெலுங்கு நடிகரின் தந்தை மருத்துவமனையில் திடீர் அனுமதி!

பிரபல தெலுங்கு நடிகர் 

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா. இவர் பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் ஆவார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு 79 வயதாகிறது. இறுதியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் செய்யப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Related posts