Editor's Picksதமிழ்நாடு

எழுத்தாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஆணை ! முதல்வர் வழங்கினார் !

முத்தமிழறிஞர் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 6 எழுத்தாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வழங்கினார். அப்போது, எழுத்தாளர் இமையம் முதல்வரை பாராட்டும் வண்ணம் செய்தியாளர்களிடம் பேசினார்.

கனவு இல்ல திட்டம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாளன்று கனவு இல்ல திட்டத்தை அறிவித்தார். இத்திட்டமானது, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு, தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது தாங்கள் விரும்பும் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியை தமிழக அரசால் அமைத்து தரப்படும் என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.

M.K.Stalin

அரசாணை

அந்த அறிவிப்பை தொடர்ந்து இந்த ஆண்டு முத்தமிழரிஞர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி கனவு இல்ல திட்டத்தின் கீழ் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் 6 எழுத்தாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்குவதற்கான ஆணையை தமிழக முதல்வர் இன்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.

6 எழுத்தாளர்களுக்கு

தமிழில் வெளியான தலை சிறந்த இலக்கிய படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது ஆகிய விருதுகளை பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு என்கிற சு.ஜெகன்னாதன், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பூமணி என்கிற பூ. மணிக்கவாசகம், முனைவர் கு.மோகன்ராசு, இமையம் என்கிற வெ. அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்கான, குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

எழுத்தாளர் இமையம்

அதிகமாக பேசுவதில்லை

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எழுத்தாளர் இமையம் ‘எழுத்தாளர்களை போற்றுவது மொழியை போற்றுவதாகும். இலக்கிய பாரம்பரியம் கொண்ட முதலமைச்சர் எழுத்தாளர்களுக்கான குடியிருப்பு அணையை வெளியிட்டிருக்கிறார். எந்த அரசும் செய்யாத அணையை முதல்வர் செய்துள்ளார். அதிகமாக பேசுவதில்லை ஆனால் காரியமாற்றுவதில் முதன்மையானவராக இருக்கிறார்.

எழுத்தாளர்களின் வாழ்க்கையில் ரூபாய் 1.5 கோடி மதிப்பிலான வீடுகளை வாங்குவது சாத்தியமில்லாதது. பாரபட்சமற்ற நேர்மையான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது’ என எழுத்தாளர் இமையம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related posts