மோடியால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு சிவாஜி கணேசன் மகிழ்ந்திருப்பார் என்று ராம்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம்
எம்.ஜி.ஆர் தனது படங்களின் மூலம் மக்களின் மனங்களில் ஆட்சி செய்துகொண்டிருந்த சமயத்தில் 1952ம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சிவாஜிகணேசன். அந்த படத்திலேயே தான் ஒரு தேர்ந்த நடிகர் என்று நிரூபித்து விட்டார் சிவாஜி. பராசக்தி படத்தின் இறுதியில் ‘ஓடினேன் ஓடினேன்’ என்று அவர் பேசும் வசனம் இன்றளவும் மக்களால் முணுமுணுக்க படுபவை.
போட்டி
எம்.ஜி.ஆர் சினிமாவில் தனது வீர வசங்கள் மூலம் அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டிருந்தார். அந்த வேளையில் இந்த பக்கம் சிவாஜிகணேசன் தனது நடிப்பால் மக்களை ஈர்க்க தொடங்கிவிட்டார். இருவரும் சினிமாவில் போட்டிபோட்டது நடித்து கொண்டிருந்த நிலையில் எம்.ஜி.ஆர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அரசியல் ஆசை
காமராஜர் மீது அதீத பற்று கொண்டதால் சிவாஜி 1961ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். 1967லம் காமராஜர் தேர்தலில் தோல்வியடைந்த போதுகூட அவர் காமராஜரை விட்டுக்கொடுக்கவில்லை. இந்நிலையில் 1975ம் ஆண்டு காமராஜர் உயிரிழந்தார். காமராஜரின் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார் சிவாஜிகணேசன்.
சட்டமன்ற தேர்தல்
அதன்பிறகு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை தொடங்கினார் சிவாஜி. இதன்பெயரில் 1989 சட்டமன்ற தேர்தலில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். மேலும், அரசியல்காக நிறைய சொத்துக்களையும் இழந்தார். பின்னர் அரசியலில் எந்த கட்சியையும் எதிர்க்கவோ, ஆதரிக்கவோ இல்லை.
ராம்குமார்
ஆனால் அவரது மூத்த மகன் ராம்குமார் பாஜகவில் இணைந்துவிட்டார். இது சிவாஜிகணேசனின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது இறுதி காலம் வரை காங்கிரஸின் தொண்டனாக இருந்த ஒருவரின் மகன் எப்படி பாஜகவில் இணையலாம் என்ற கேள்வி அனைவருக்கும் எழ தொடங்கியது. அதிலும் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலைகள் அதிகமாக இருந்த நேரம் அது.
வினர்சனம்
கட்சியில் இணைந்த பிறகு கூட எந்த அரசியல் நிகழ்விலும் தலைக்காட்டாமல் இருந்தார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அளித்த ஒரு பேட்டியில் “நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால், அவர் வாங்கிய செவாலியர் விருதை மோடிக்கு வழங்கி இருப்பார். அந்த அளவுக்கு மோடி தற்போது நடித்து வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
அறிக்கை
இதற்கு பதிலளிக்கும் விதமாக சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இரா.முத்தரசன், பிரதமர் மோடியை விமர்சிக்கும்போது, தேவையின்றி எங்களுடைய தந்தை சிவாஜியின் பெயரை இழுத்திருக்கிறார். நடிகர் சிவாஜி கணேசனும் பிரதமர் மோடியும் தனது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் உயர்ந்தவர்கள்.
திட்டவட்டம்
மேலும், என் தந்தை இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்திருப்பார். உலக அரங்கில் மோடியால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார். பாஜக அளித்ததாக நீங்கள் குறிப்பிட்ட வாக்குறுதியை நம்பி, மக்கள் கடன் வாங்கவில்லை. உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக அளித்த வாக்குறுதிதான் மக்களை கடன் வாங்க வைத்துள்ளது. சிவாஜி கணேசனைப் பாராட்டுவதை வரவேற்கிறோம். ஆனால், பிறரைத் தரமின்றி விமர்சிப்பதற்கு அவரது பெயரைப் பயன்படுத்த வேண்டாம்” என்று ராம்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.