பாஜகவில் இருந்து மதுரை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து சரவணன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சரவணன் நீக்கம்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் பாஜகவினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்டதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சரவணன் நீக்கம் செய்யப்படுகிறார் என அண்ணாமலை அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

