தொழிலதிபரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இறப்பு
பிரபல தொழிலதிபரும், பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. திடீர் உடல்நலக்குறைவால் இன்று காலை மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனைக்கு காலை 6.45 மணிக்கு ஜுன்ஜுன்வாலா அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என குறைப்படுகிறது. அண்மையில், ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ராகேஷ் ஜுன் ஜுன்வாலா தொடங்கியது உள்ளார். மேலும், ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடக்க விழாவில் வீல்சேரில் வந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

