தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து அலுவலர்களும் முதற்கட்டமாக மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 20,227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 771 நபர்களுக்கு தொற்று பாதித்துள்ளது.இதில்,முக்கிய மாவட்டமான சென்னையில் 345 பேருக்கும், செங்கல்பட்டில் 126 பேருக்கும், கோவையில் 55 பேருக்கும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தொற்று அதிகரிப்பு
அதன்படி, தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,63,068 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 419 ஆக அதிகரித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை 352 ஆக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,678ஆக அதிகரித்துள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு
இந்நிலையில், பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழகத்தில் BA5 புதிய வகை கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் இதன் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் 24-6-2022 தேதி முதல் கட்டாயமாக முக்ககவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை கூட்டம்
மேலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இன்று டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுஜீத் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஆளுநர் மாளிகை ஒன்றும் அரசியல் பேசும் இடமில்லை – கே.எஸ். அழகிரி கருத்து !