இந்தியாவணிகம்

ஒரே நிறுவனத்தை சேர்ந்த 600 செல்போன் டவர்கள் திருட்டு ! ஆய்வில் அதிர்ச்சி தகவல் !

கொரோனா தொற்று பாதித்த ஆண்டு முதல் இதுவரை சுமார் 600 மொபைல் டவர்கள் திருட்டு போயுள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மொபைல் போன் டவர்கள்

மொபைல் போன் டவர்களை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிறுவனம் ஜிடிஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட். இந்த நிறுவனம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டது. இதன் மண்டல அலுவலகம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ளது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 26,000 மொபைல் போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன் டவர்களை அமைத்துள்ளது

GTL Infrastructure Limited

சேவை நிறுத்தம்

ஒரு தனியார் டவர் சேவை நிறுவனம் பெரும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இதனால் நெட்வொர்க் சேவை நிறுவனங்களுக்காக இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட மொபைல் போன் டவர்களின் பயன்பாடு குறைந்து விட்டது. இதனால் தமிழகத்தில் சில மொபைல் டவர்கள் செயல்படாமல் இருந்தது.

பராமரிப்பு பணிகள்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த டவர்களை கண்காணித்து வரும் நிறுவனங்களால் டவர் தளத்தில் சென்று கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு முதல் கண்காணிப்பில் இல்லாததால் இந்த டவர்கள் திருடப்பட்டுள்ளதாக டவர்களை அமைத்த ஜிடிஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.

மொபைல் டவர்கள்

டவர்கள் ஆய்வு பணி

தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்தில் டவர்களை மற்ற நிறுவனங்களுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பெயரில் தமிழகத்தில் உள்ள டவர்கள் ஆய்வு செய்யும் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அப்போது சில மாவட்டங்களில் ஒட்டுமொத்த டவர்களுமே காணமல் போயிருந்தது.

டவர்கள் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவன அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேலும் பல இடங்களில் டவர்கள் திருட்டு போய் உள்ளது தெரிய வந்தது. தமிழகம் முழுக்க நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 600க்கும் மேற்பட்ட டவர்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நடவடிக்கை

மேலும், இதுபோன்ற திருட்டு சம்பவங்களைத் தடுக்க காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செல்போன் டவர்கள் அமைக்க சுமார் 40 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

Related posts