இந்தியாதமிழ்நாடுவணிகம்

வெளியானது நுகர்வோர் விலை குறியீட்டு எண் பட்டியல் – மோசமான இடத்தை பிடித்த தமிழகம்!

நுகர்வோர் விலை குறியீட்டு எண்(CPI) என்பது, நுகர்வோர் பொருட்களின் விலை மற்றும் சந்தையில் எற்படும் விலை மாற்றத்தினை அளவிட பயன்படுகிறது.

இந்த ஆண்டின் மார்ச் மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகப்பொருட்களை பயன்படுத்துவதற்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் அதிகமாகியுள்ளது. குறியீட்டு எண் அதிகமாதல் என்பது பொருட்களின் விலைவாசி உயர்வை குறிப்பதாகும். இதில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

வேளாண் மற்றும் ஊரக நுகர்வோர் விலை குறியீட்டு எண் கடந்த மாதத்தை விட 3 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண் வரிசையில் தமிழகம் மோசமான இடத்தை பெற்றுள்ளது.

மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விநியோகம் செய்து வரும் இமாச்சல பிரதேசம், தொடர்ந்து வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண் வரிசையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.

Related posts