சமூகம்தமிழ்நாடு

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியது 12 வயது சிறுவனா? உண்மை என்ன?

தஞ்சாவூரில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் வசிக்கும்17 வயது சிறுமிக்கு நேற்று பெண்குழந்தை பிறந்துள்ளது. திருமணம் ஆகாத சிறுமிக்கு நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமாக அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் என்று கூறப்படுகிறது. pocso சட்டத்தின்படி சிறுவனை கைது செய்த காவல் துறையினர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனுக்கு ஜாமீன் வழங்கினார்.

உண்மையிலேயே சிறுமியின் கர்ப்பத்திற்கு 12 வயதே ஆகிய சிறுவன்தான் காரணமா என்று தெரியவில்லை. அதை கண்டறிவதற்காக சிறுமியின் உறவினர்களிடமும் சிறுவனின் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பெற்றோரிடமும் இந்த கொடூர சம்பவம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உண்மையான குற்றவாளியை கண்டறிவதில் அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குற்றவாளி யாராக இருந்தாலும் pocso சட்டத்தின்படி கைதுசெய்ய படுவார்கள் என கூறப்படுகிறது.

பெண்களின் திருமண வயதே 18 டாக இருக்கும் போது 17 வயது சிறுமிக்கு ஒரு குழந்தை என்பது அந்த சிறுமியின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

Related posts