அறிவியல்

கருந்துளைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க !

கருந்துளை என்பது பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு இடம். அந்த இடத்தில் நிலவும் ஈர்ப்பு விசை ஒளியை வெளியே செல்லவிடாமல் ஈர்க்கும். ஒரு பொருளானது சிறிய இடத்திற்குள் அடைபடும் போது ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும். இந்த அறிவியல் தான் கருந்துளையின் ஈர்ப்புக்கு காரணம். ஒரு நட்சத்திரம் அழியும் போது கருந்துளை உருவாகும். கருந்துளைகளுக்கு ஆங்கிலத்தில் பிளாக்ஹோல்ஸ் என்று பெயர்.

பிளாக்ஹோல்ஸ்(Black Holes) ஐ நம்மால் பார்க்க இயலாது. காரணம், ஒளியைக்கூட வெளியேற விடாமல் ஈர்த்துக்கொள்ளும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையை [Gravity] அது கொண்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் தொலைநோக்கி மற்றும் சில கருவிகளை பயன்படுத்தி பிரபஞ்சத்தில் எங்கே கருந்துளை இருக்கிறது என்பதை அறிய முடியும்.

எப்படி உருவாகிறது?

அறிவியலாளர்கள் இந்த பிரபஞ்சம் உருவானபோதே சிறிய சிறிய கருந்துளைகள் உருவானதாக தெரிவிக்கிறார்கள். மிகப்பெரிய கிரகங்கள் அல்லது ஸ்டார்கள் அழியும் போது அல்லது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் போது மிகப்பெரிய கருந்துளைகள் [Stellar black holes] உருவாகின்றன.

கருந்துளைகள் எவ்வளவு பெரியதாக இருக்கும்?

கருந்துளைகள் பல்வேறு அளவுகளில் இருக்கின்றன. அவை அணுவின் அளவில் துவங்கி மிகப்பெரிய அளவிலும் இருக்கின்றன. அணுவின் அளவில் இருக்கும் கருந்துளையானது மிகப்பெரிய மலையின் எடை அளவில் இருக்கும்.

ஒரு பொருளின் மீது பட்டு திரும்புகிற ஒளியைக்கொண்டே அந்தப்பொருள் இருப்பதை அறிகிறோம். ஆனால் கருந்துளைகள் ஒளியைக்கூட தனக்குள் இழுத்துக்கொள்ளும் . ஆகவே, கருந்துளைகளை நேரடியாக கண்டுணர முடியாது.

 

பூமிக்கு ஆபத்து இருக்கிறதா?

கருந்துளை நட்சத்திரங்களை விழுங்குவதற்காக பிரபஞ்சத்தில் சுற்றித்திரிவது இல்லை. இப்போதைக்கு கருந்துளைக்குள் விழுந்து அழியும் ஆபத்து பூமிக்கு இல்லை. நம்முடைய சூரிய மண்டலத்துக்கு அருகே அப்படியொரு கருந்துளை இல்லை.கருந்துளையை உருவாக்கும் அளவுக்கு சூரியன் மிகப்பெரியதாய் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

 

 

Related posts