குஜாரத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகை தந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், காந்தி ஆசிரமத்திற்கு சென்று மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டையை சுற்றினார்.
சுற்றுப்பயணம்
இந்தியா – பிரிட்டன் இடையே ராணுவம், வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் சுற்று பயணமான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத்தில் இருந்து தன் பயணத்தை தொடங்கிய ஜான்சன், பிரிட்டனில் முதலீடு செய்துள்ள தொழிலதிபர்கள் மற்றும் இந்தியாவில் வளர்ந்து வரும் முக்கிய நிறுவனத்தின் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.
ராட்டையை சுற்றிய போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் இரண்டாவது தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமான குஜராத்திற்கு பிரிட்டன் பிரதமர் ஒருவர் வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அகமதாபாத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கிய ஜான்சன், முதலில் சபர்மதி நதிக்கரையில் அமைத்துள்ள மகாத்மா காந்தியின் ஆசிரமத்திற்கு சென்றார்.
அங்கு மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டையை சுற்றி மகிழ்ந்தார்.
நாளை ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் மற்றும் மகாத்மா காந்தி சமாதிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார். அதன்பின்பு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.