அறிவியல்

VPN என்றால் என்ன? வாருங்கள் தெரிந்துகொள்வோம்

VPN என்பதற்கு ஆங்கில விரிவாக்கம் Virtual Private Network . VPN இன் முக்கிய பயன்பாடு, இணையத்தை பயன்படுத்துபவரின் விவரங்களை (Location, Browsing History) மறைப்பது. எவரும் கண்காணிக்க முடியாமல் செய்வது. மேலும் தனித்துவமான பாதுகாப்பான இண்டெர்நெட் இணைப்பினை வழங்குவது .

உங்களது நிறுவனம் வெளிநாட்டில் இருக்கின்றது என வைத்துக்கொள்வோம் . உங்களது நிறுவனத்தின் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் . அதே இண்டெர்நெட்டை பிறரும் பயன்படுத்தி உங்களது சர்வரில் இருந்து தகவலை திருட முடியும் .

நீங்கள் உங்களது கணிணி அல்லது மொபைலில் VPN ஐ இண்ஸ்டால் செய்திருக்கிறீர்கள் . இப்போது நீங்கள் பிரவுஸ் செய்திடும்போது உங்களது request அனைத்தும் VPN சர்வருக்கு செல்லும் .

ஒரு இணையதளத்தை இந்திய அரசாங்கம் முடக்க போகிறது என்றால் குறிப்பிட்ட இணையதளம் குறித்த தகவலை ஏர்டெல் , வோடபோன் போன்ற நெட்ஒர்க் நிறுவனங்களுக்கு அனுப்பிடும்.

பயனாளர்கள் அந்த இணையதளத்தை பயன்படுத்த request அனுப்பினால் அனுமதி மறுக்கப்படும். இந்திய அரசின் ஆணைப்படி இணையதளம் தடைசெய்யப்பட்டுள்ளது என செய்தி வரும் .

ஆனால் VPN ஐ பயன்படுத்திடும்போது உங்களது இருப்பிடம் இந்தியா என இருக்காது. மாறாக VPN server இருக்கும் இருப்பிடமே ஏர்டெல் , வோடோபோன் போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் . ஆகையால் உங்களால் இணையதளத்தை பார்க்க முடியும் .

பல நிறுவனங்கள் தங்களது சர்வரை remote login செய்வதற்கு VPN ஐ பயன்படுத்துகின்றன. தகவல் பரிமாற்றத்தை உறுதிபடுத்த authentication செய்யவேண்டி இருக்கும். அதாவது password, tokens போன்றவற்றை உள்ளீடு செய்யவேண்டி இருக்கும்.

VPN பாதுகாப்பானதா?

இரண்டு விதமான VPN இருக்கின்றன . Free VPN மற்றும் Paid VPN . அதே போல பல VPN ப்ரொவைடர்கள் இருக்கிறார்கள். சிலர் நம்முடைய தகவல்களை சேமித்துவைக்கிறார்கள். சிலர் அதனை செய்வது இல்லை.

உதாரணத்திற்கு நாம் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற Hotspot Shield VPN ஆனது Users எந்த இணையதளங்களுக்கு போகிறார்கள் என்பதனை கண்காணிக்கிறது . ஆனால் அதனை தனித்துவமாக செய்யாமல் ஒட்டுமொத்தமாக செய்கின்றது.

Related posts