எலக்ட்ரிக் பைக்குகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு !
புதிய எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. பயன்பாட்டில் உள்ள எலக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட கோளாறுகளை முதலில் அந்தந்த நிறுவனங்கள் சரி செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
எலக்ட்ரிக் பைக்
சமீபத்தில் எலக்ட்ரிக் சைக்கிள், எலக்ட்ரிக் பைக், எலக்ட்ரிக் கார் என ரீசார்ஜ் பேட்டரி மூலம் இயங்க கூடிய வாகனங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. இன்றைய டீசல், பெட்ரோல் விலைகளின் ஏற்றத்தை கண்டு பலர் இந்த E- Vehicles பக்கம் திரும்பினர். அதனால் இந்த E- Vehiclesஇன் டிமாண்டும் அதிகரித்து. OLA நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்கை புக்கிங்க செய்து மாத கணக்கில் காத்திருந்து வாங்கிய கதையெல்லாம் இங்கே அரங்கேறியுள்ளது.
தீ விபத்து
சமூகவலை தளத்தில் சில நாட்களாகவே எலக்ட்ரிக் பைக்குகள் தீ பிடித்து எரியும் பல வீடியோக்கள் பரவி வருகின்றன. பைக்கில் இருக்கும் பேட்டரின் பழுத்தின் காரணமாக தான் வாகனங்கள் தீ பிடித்தது என்றும். சிலர் தரமில்லாத உதிரி பாகங்கள் தான் காரணம் என்றும் தங்களின் யூகத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், சிலர் எலக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்டுள்ள பழுதுகளை பற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளையும் அந்தந்த நிறுவனங்கள் எடுக்கவில்லை என்று நிறுவனங்கள் மீதும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு உத்தரவு
இதுபோன்ற தொடர் சம்பவங்களால் மத்திய அரசை நோக்கி பல கேள்விகளும், பல நெருக்கடிகளும் நிலவி வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு ஒன்றை வெளிட்டார்.
அதில், ‘தீ பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்களின் பேட்சில் உள்ள எல்லா எலக்ட்ரிக் பைக்குகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். அதிலுள்ள கோளாறுகளை முதலில் சரி செய்யவேண்டும்.
தீ பற்றியதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து பதிலளிக்க வேண்டும். அது வரை எந்த நிறுவனங்களும் புதிய எலக்ட்ரிக் பைக்களை அறிமுகப்படுத்த வேண்டாம்’ என்றும் கூறியுள்ளார்.
மேலும், புதிய வாகனத்தில் கோளாறு இருந்தால் மோட்டார் வாகன சட்டப்படி அந்தந்த நிறுவனங்கள் தங்களின் எல்லா வாகனங்களையும் திரும்ப பெறுவதோடு, அந்த நிறுவனத்தின் மீது மத்திய அரசு அபராதம் விதிக்கும் என்றார்.
மத்திய அமைச்சரின் உத்தரவுக்கு பின் ஓலா, ஒகினாவை, ப்யூர் EV போன்ற நிறுவனங்கள் 7000திற்கும் மேலான எலக்ட்ரிக் பைக்குகளை திரும்ப பெற்றுள்ளன.