இந்தியாசமூகம்தமிழ்நாடுமருத்துவம்

சென்னையில் 300 நெருங்கியது கொரோனா பாதிப்பு – மக்களே உஷார் !

தமிழநாட்டில் நேற்று ஒரே நாளில் 589 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12,000-த்தைத் தாண்டியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

virus

சுகாதாரத்துறை அறிக்கை

நேற்று தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘நேற்று ஒரே நாளில் 15,742 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,59,586 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 208 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் கொரோனா பரவல்

தற்போது கொரோனா பாதித்து 2,694 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மேலும், சென்னையில் 286 பேருக்கும், செங்கல்பட்டில் 119 பேருக்கும், கோயம்புத்தூரில் 39 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

covid cases

கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு

கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் 3 சதவீதம் மட்டுமே பாதிப்பு உள்ளது. எனவே கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது என சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ma. subramaniyan

 

Related posts