ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெய்பீம் சர்ச்சை
நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில், இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோர் மீது இந்திய தண்டனை கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவர் குறிப்பிட்டிருந்தார்.
உயர் நீதிமன்றம்
இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சூர்யா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அதுவரை இந்த வழக்கில் நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

