நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘எண்ணித் துணிக’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய படம்
குற்றம் குற்றமே படத்தை அடுத்து ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கு படம் எண்ணித்துணிக. அதுல்ய ரவி கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தை வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார். மேலும், ஜி மாரி முத்து, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெயின் ஆப் ஆரோவ்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து வெளியீடுக்காக காத்திருக்கிறது.
ரிலீஸ் தேதி
எண்ணித் துணிக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை பெற்றது. இந்நிலையில், எண்ணித் துணிக படம் ஆகஸ்ட் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கேப்மாரி படத்திற்கு பிறகு ஜெய், அதுல்யா இணைந்து நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
#Yennithuniga Releasing worldwide In Theatres on August 04th!!#YennithunigaFromAug4th@DirVetrisk @SamCSmusic pic.twitter.com/f114oFgCht
— Jai (@Actor_Jai) July 18, 2022

