காவேரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்
காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16து கூட்டம் வருகிற ஜூன் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு மேகதாது அணை விவகாரம் குறித்து கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், ‘காவேரி கரையில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகா மாநில அரசு அளித்த திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை ஒப்புதல் அளிக்க கூடாது என கடந்த ஆண்டு ஜூன் 17ம் தேதி நான் உங்களிடம் வலியுறுத்தியிருந்தேன்.
Hon’ble @PMOIndia, I learn that CMWA has included Mekedatu project in the agenda of its 16th meeting. This is not at all acceptable to Tamil Nadu and legally untenable as CMWA was specifically constituted only to implement the orders of the Supreme Court. (1/2) pic.twitter.com/l6QRdDRvoR
— M.K.Stalin (@mkstalin) June 13, 2022
கர்நாடகா அரசு
மேலும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு எதிராக இந்த அண்டு மார்ச் 21ம் தேதி தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட அனுமதி அளிக்கப்படாது என்று எங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கூறிய கருத்துகள் இருக்கும் நிலையில், வரும் ஜூன் 22ம் தேதி நடைபெறவுள்ள 16து காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணைத் திட்டத்தின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த முடிவு தமிழ்நாட்டின் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எங்களுடைய மாநிலம், குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்துக்கும் காவிரியைச் சார்ந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
வழக்கு நிலுவை
காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு வழங்கவேண்டும்’ என்று தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.