Editor's Picksசமூகம்தமிழ்நாடு

இரு தரப்பினரிடையே மோதல் ! வீடுகளுக்கு தீவைப்பு ! போலீசார் குவிப்பு !

தஞ்சாவூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு மூன்று வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பு மோதல்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரியில் உள்ள ஐய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலை அடுத்து காவல்துறையினர், வருவாய்த்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Fire

போலீசாருக்கு படுகாயம்

இதனை தொடர்ந்து இரு தரப்பினரிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு கல்வீச்சு மற்றும் வீடுகளுக்கு தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதில் மூன்று வீடுகள் கொளுத்தப்பட்டன. பாபநாசம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜீப்பின் முன்பக்க கண்ணாடி கலவரக்காரர்களால் உடைக்கப்பட்டது. இந்த மோதலின்போது, கபிஸ்தலம் உதவி ஆய்வாளர் ராஜ்கமல் படுகாயம் காயமடைந்தார். தற்போது பாபநாசம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும், கலவரத்தை தடுக்க முயன்ற போலீசார் பலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.

Police

போலீசார் குவிப்பு

இந்நிலையில், தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளர் பூரணி, கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் சம்பவ இடத்திற்கு வந்தனர். ராஜகிரியில் அதிரடிப்படை, ஆயுதப்படை என 100ம் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டனர். ராஜகிரி மெயின் ரோட்டில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

Police

வழக்குப்பதிவு

இதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் குறித்து பாபநாசம் காவல் ஆய்வாளர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருந்த 10ம் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
இரு தரப்பு மோதல் காரணமாக தஞ்சாவூரில் பதற்றமான சூழல் நிலவிவருகின்றது.

Related posts