தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்! கொலை செய்ய சொன்ன மனைவி ! தூத்துக்குடியில் பயங்கரம் !

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவியே உடந்தையாக இருந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பேரூரணி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி ( 36). இவா் வெளி மாநிலங்களுக்கு சென்று வரும் லாரியில் டிரைவராக வேலை பாா்த்தது வந்தாா். இவருக்கு திருமணமாகி கனகலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான கருப்பசாமி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா்.

Tuticorin

வீட்டின் முன்பே கொலை

இந்நிலையில், லாரியில் வெளிமாநில நடைக்கு சென்று மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 7ம் தேதி கருப்பசாமி வீட்டுக்கு வந்துள்ளார். அன்று குடும்பத்தினருடன் கருப்பசாமி இரவில் உணவருந்தி விட்டு வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளாா். மறுநாள் காலை பார்த்த பொழுது வீட்டின் முன்பே கருப்பசாமி கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தட்டாபாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசாாின் சந்தேக பாா்வை கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமி மீது திரும்பியது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது செல்போனுக்கு ஒரு நம்பரிலிருந்து அடிக்கடி அழைப்பு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கனகலட்சுமியிடம் தொடா்ந்த கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

Police Station

விசாரணை

கடந்த ஓராண்டாகவே கணவர் கருப்பசாமி அடிக்கடி குடித்துவிட்டு தன்னிடம் தகராறு ஈடுபடுவதாக கடம்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது. அப்போது கனகலட்சுமிக்கு ஆதரவாக சோழபுரத்தை சேர்ந்த உறவினர் ரவிசந்திரன் என்பவர் பேசிவந்தார். இதில் கனகலட்சுமிக்கும் ரவிச்சந்திரனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. ரவிச்சந்திரனிடம் போனில் பேசியதை தெரிந்து கொண்ட கருப்பசாமி மனைவி கனகலட்சுமியை கண்டித்து, மட்டுமில்லாமல் சித்திரவதை செய்வதாக கூறப்படுகிறது.

தகவல் கொடுத்த மனைவி

இதையடுத்து கணவர் தன்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக அவ்வப்போது ரவிச்சந்திரனிடம் கூறி வந்துள்ளார். அவரும் கனகலட்சுமிக்கு ஆறுதல் கூற இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கருப்பசாமியின் தொந்தரவு அதிகரித்து வந்தது. இந்நிலையில், இரவு வெக்கை காரணமாக வீட்டின் வெளியே கணவர் தூங்கும் தகவலை அவரது மனைவி கனகலட்சுமி ரவிச்சந்திரனுக்கு போனில் தெரிவித்துள்ளார்.

Police

போலீசார் கைது

இதையடுத்து அன்று இரவே பேரூரணிக்கு வந்த ரவிசந்திரன் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்த கருப்பசாமியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார் கொலைக்கு உடைந்தையாக இருந்த கருப்பசாமின் மனைவி கனகலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவியே உடந்தையாக இருந்தது சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts