கல்விசமூகம்தமிழ்நாடுவிளையாட்டு

உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி தமிழக மாணவி சாதனை !

ஜப்பானில் நடந்த உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை மாணவி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

சாம்பியன்ஷிப் போட்டி

இப்போட்டியில், இந்தியா சார்பில் சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவி சிரோமிதா பங்கேற்று போட்டியிட்டார். காலிறுதி, மற்றும் அரையிறுதியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனையுடன் மோதினார். இதில், 42 – 60, 40 – 75 என்ற புள்ளிக் கணக்கில் சிரோமிதா அதிர்ச்சி தோல்வியடைந்தார். இரண்டாமிடம் பிடித்த அவருக்கு, வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்தியா சார்பில் பங்கேற்று சாதனை படைத்து சென்னை திரும்பிய மாணவிக்கு, செயின்ட் ஜோசப் கல்லுாரி சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related posts