சமூகம்தமிழ்நாடுமருத்துவம்

ஈரோட்டில் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது !

ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

கருமுட்டை விற்பனை

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை, தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், சிறுமியின் தாய், தாயின் கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஈரோடு, சேலம், ஓசூர் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்களுக்கு முதல் கட்டமாக சீல் வைக்கப்பட்டது.

அதேபோல் சுதா மருத்துவமனைக்கும் ( தனியார்) சீல் வைக்கப்பட்டு அங்கிருந்த நோயாளிகள் அருகே உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. சிறுமியின் தாய் சுமையா, தாயின் கள்ளக்காதலன் சலீம்,இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 4 பேர் மீதும் ஏற்கனவே போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts