வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேட்டையாடு விளையாடு
கவுதம் மேனன் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 2006-ல் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கதை தயார்
அதன்பெயரில், வேட்டையாடு விளையாடு -2 படத்தின் முழு கதையையும் தற்போது தயாராகி உள்ளதாகவும், விரைவில் கமலை சந்தித்து இயக்குனர் கவுதம் மேனன் கதை சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், வெந்து தணிந்தது காடு படம் வெளியானதுக்கு பிறகு வேட்டையாடு விளையாடு -2 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

