விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 22 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள்
75-வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பெயரில் சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி, தொப்பூர் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தினர். அப்போது 22 ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த 22 ஆம்னி பேருந்துகள் மீது வழக்குபதிவு செய்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் திரும்பவும் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

