மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து வரும் 30ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
மறியல் போராட்டம்
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘ஒன்றிய அரசி்ன் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து, அந்த கொள்கைகளை கைவிட வலியுறுத்தியும், குடும்பங்களின் வாழ்க்கையில் கழுத்தை முறிக்கும் சுமையாக இருக்கும் போது, தமிழ்நாடு அரசு வீட்டு வரி, சொத்துவரி, மின்கட்டணங்கள் போன்றவற்றை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்து, வரி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் வரும் 30ம் தேதி தமிழக முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

