மருத்துவம்

பல் துலக்காமல் டீ அருந்தும் நபரா நீங்கள் ? அப்போ இது உங்களுக்குத்தான்.

பல்துலக்காமல் டீ குடிக்கும் நபர்களுக்கு பல உடல்ரீதியான பிரச்னைகள் வரும் என்று மருத்துவர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்.

டீ

காலையில் எழுந்ததும் சூடாக ஒரு கப் டீ அருந்தும் பழக்கம் பல பேருக்கு உண்டு. சிலருக்கு டீ அருந்தாமல் அந்த நாளே ஓடாது. அந்த அளவுக்கு டீ தன் சுவையால் பலரை அடிமையாகியுள்ளனர். உணவு பிரியர்கள் போல டீ பிரியர்கள் என்ற ஒரு தனி கூட்டமே உள்ளது. அந்த கூட்டத்திற்கு ஏற்ப பல வகை டீ யும் உண்டு.

பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் பெட் டீ குடிக்க விரும்புவர். ஆனால் அது எவ்வளவு ஆபத்து தெரியுமா? மேலும் ஸ்டராங் ஆக குடித்தால் பாதிப்பு பெரியதாக இருக்கும். டீ யில் காப்பைன் உள்ளது. இது உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அசிடிட்டி

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பலர் சந்திக்கும் பிரச்சனை அசிடிட்டி. வெறும் வயிற்றில் டீ குடிக்கும்போது இரைப்பையில் அதிக அமிலம் சுரந்து அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகின்றது. இதனால் உடலில் செரிமான அமிலமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து டீ குடித்து வருவதால் செரிமான மண்டலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த பாதிப்பு பிற்காலத்தில் மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கிவிடும்.

குமட்டல்

பல்துலக்காமல் டீ அருந்துவதால் வாயில் உள்ள பாக்ட்ரியாக்கள் உள்ளே சென்று, குமட்டல் உணர்வு மற்றும் வாந்தி ஏற்படுகின்றது. கோடைகாலத்தில் அதிகம் டீ அருந்துவதை குறைத்து கொள்வது நல்லது.

பசியின்மை

ஒரு நாளைக்கு பலமுறை டீ குடிப்பவர்களுக்கு பசியுணர்வு மிக குறைவாக இருக்கும். பசியுணர்வு குறைந்தால் உண்ணும் உணவின் அளவும் குறையும். உண்ணும் உணவின் அளவு குறையும்போது ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும்.

அதிகமாகும் சர்க்கரை அளவு

காலையில் வெறும் வயிற்றில் டீ அருந்துவது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். பின்னர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோயோடு அவதிப்பட வேண்டியதுதான்.

எனவே, ஒரு புத்துணர்ச்சிக்காக டீ அருந்தலாம். ஆனால் அதையே பழக்கமாக்கி கொள்வதும், நேரம் தவறி அருந்துவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

 

 

Related posts