இந்தியாசமூகம்

ஒரு காதலனும் மூன்று மனைவிகளும் – பழங்குடி மக்கள் திருமணம் வாழ்க்கை.

ஒரே நேரத்தில் மூன்று காதலிகளை திருமணம் செய்த 42 வயது காதல் கணவன் – 90’ஸ் கிட்ஸ்கள் கலக்கம்.

மத்தியபிரேதச மாநிலம்

மத்தியபிரேதச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சம்ரத் மயுரியா 42 வயதான இவர் போபாலில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர்.

மூன்று காதலிகள்

இந்நிலையில், மூன்று பெண்களை பல காலமாக சம்ரத் மயுரியா காதலித்து வந்தார். குடும்ப சூழ்நிலையால் திருமணம் செய்யாமல் சுமார் 15 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திவந்தார். அதில் முதல் காதலிக்கு 4 குழந்தைகள்கள், மற்ற இரண்டு காதலிக்கு தல ஒரு குழந்தை உள்ளது. தற்போது அவருக்கு 42 வயதகியுள்ளதால் அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

பழங்குடிகள் முறை

அங்கு பழங்குடினர் முறைபடி ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. திருமணம் செய்ய முடிவெடுத்தார் அவர். திருமண நாள் குறித்து தனது சொந்த கிராமமான மோரி பாலியாவில் ஒரே மேடையில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பொது தனது, மூன்று மனைவிகளின் சொந்தகாரர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில் 2003 ஆம் ஆண்டு முதல் தனது முதல் காதலியை நிச்சியதார்தம் செய்துகொண்டதாகவும் மற்ற இரு பெண்களுடன் 15 ஆண்டுகளாக  வாழ்ந்து வருவதாக கூறினார்.

90’s கிட்ஸ்

இந்த வினோதநிகழ்வு சோசியல் மீடியவில் பரபரப்பாக பேசபட்டு, சிலர் வாழ்த்தியும் ஷேர் செய்தும் வருகின்றன. இந்த திருமணம் மூன்று நாட்கள் நடைபெற்றது. ஹயிலைட் என்னவென்றால் இவர் திருமணத்தில் 6 குழந்தைகளும் கலந்து கொண்டனர். இச்சம்பவத்தை அறிந்த 90’s கிட்ஸ் கலங்கிபோய் உள்னனர்.

Related posts