தமிழ்நாடு

ஆட்டோ மீது மரம் விழுந்ததில் இருவர் பலி – திருநெல்வேலி பத்தமடையில்.

சாலை விரிவாக்க பணியின் போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலே இரண்டு பேர் பலி, பொதுமக்கள் சாலை மறியல்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதிலிருந்து திருச்செந்தூர் வரை மாநில நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சாலை பணி மிக மந்தமாக நடைபெறுகிறது என பொதுமக்கள்  குற்றச்சாட்டுயுள்ளனர்.

சாலை விபத்து- பத்தமடை

இதற்கிடையே பத்தமடையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. ஜேசிபி இயந்திர மூலமாக சாலையில் உள்ள மரத்தை அகற்றும் பணி நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கோர சம்பவம் நடந்தேறியது. இதில் ஆட்டோ ஓட்டுனர் காதர், பயணம் செய்த பெண் ரஹ்மத் இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த மூன்று பேர் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  காவல் துறைனர் வழக்குப்பதிவு செய்து, ஜேசிபி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனை அறிந்த பத்தமடை பொது மக்கள் சாலைமறியலியல் ஈடுபட்டு வருகின்றன. அப்போது அவர்களால் கூறியது, சாலை விரிவாக்க பணியில் அதிகாரிகள் மிக , முறையான ஊழியர்கள் இல்லாமல் மரத்தை அகற்றியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுள்ளனர்.

பாதுகாப்பு இல்லை

இதேபோல் பலமுறை மரத்தை அகற்றும்போது மக்களுக்கு  எந்த ஒரு பாதுகாப்பு இல்லாததை கண்டு, பொதுமக்களுக்கு நெடுஞ்சாலை துறையையும், ஒப்பந்தக்காரரையும் கண்டித்து போரட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.

சாலை விரிவாக்க பணியின் போது ஆட்டோ மீது மரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts