தருமபுரியில் ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை
தருமபுரி, அரூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (28). இவர் தனியார் கம்பெனியில் பணிசெய்து வருகின்றார். பிரபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். அறியாமையில் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி மன நோயாளிகளாக மாறியுள்ளார். ஒன்லைன் ரம்மியில் சுமார் 15 லட்சம் ரூபாய் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

