கவரிங் நகைகளை அடமானம் வைத்த மோசடியில் ஆரணி நகரக் கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழுவினர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கவரிங் நகை, நிரந்தர பணி நீக்கம்
ஆரணி நகர கூட்டுறவு வங்கியில், போலியான நபர்களுடைய பெயர்களில், 8.4 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து, 2.39 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, சென்னை வணிகக் குற்றப்புலனாய்வு பிரிவில், செய்யாறு துணை பதிவாளர் புகார் செய்தார்.
, திருவண்ணாமலை வணிக குற்றப்பிரிவுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, மோசடி உறுதியானது. இதையடுத்து, தலைவர் அசோக்குமார், மேலாளர் லிங்கப்பா உள்ளிட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், கூட்டுறவு வங்கி துணைத் தலைவராக இருந்த ஆனந்த் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரும், துறை ரீதியான விசாரணை தொடர்ந்தது. இந்த நிலையில், ஆரணி நகரக் கூட்டுறவு வங்கியின் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டிருக்கிறது. மேலும், மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகியோர் நிரந்தரப் பணி நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

