தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர்
சங்கரன்கோவிலை சேர்ந்தவர் ரவியின் மகன் செல்வம் (20). இவர் கடந்த 4ம் தேதி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அருகில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த போது, தனது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.மேலும், வாகனநிறுத்ததில் சுற்றியுள்ள சிசிடிவியை ஆய்வு செய்தனர். அப்போது எட்டயபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஸ்ரீராம்(20) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் துணை ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான போலீஸ் குழு ஸ்ரீராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு உரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

