திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி மக்கள் அவர்களது பாதுகாப்பாளர்களுடன் கலந்து கொண்டனர். விண்ணப்பதாரர்களை காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது.

