திரவுபதி முர்மு ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே
நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வருகிற18 தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு என்ற பழங்குடியின பெண் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் போட்டியிடுகிறார்.இது குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், திரவுபதி முர்மு நாட்டின் ஜனாதிபதியாக பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவர் இந்திய நாட்டின் ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை மற்றும் கவுரவம் ஆகும். பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதால் நானும் பெருமை அடைகிறேன் என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

