பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஹிந்தி டீசரை நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய வரலாற்று கதையான பொன்னியின் செல்வன் புத்தகத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலயில், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டெம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தது படக்குழு. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
டீசர் வெளியிடு
கடந்த வாரம் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என்று ஐந்து மொழிகளில் வெளியாகும் டீசரை ஹிந்தியில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் வெளியிடுகிறார்.

