இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் மற்றும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர்.இதன் காரணமாக போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. பின்னர் அடுத்தடுத்து கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட பொறுப்பில் இருந்த அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்த காரணத்தால், இன்று தனது பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமரை கட்சி விரைவில் தேர்ந்தெடுக்கும் என்றும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

