பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் விக்ரம் டப்பிங் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
வரலாற்று படம்
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க மணிரத்னம் இயக்கியுள்ளார். மேலும், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டப்பிங் வீடியோ
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
Our Chola Tiger Roars – in 5 tongues!#PS1Teaser #PonniyinSelvanTeaser #PonniyinSelvan#PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!@madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman #Vikram @Tipsofficial pic.twitter.com/0cIEQIIrUU
— Lyca Productions (@LycaProductions) July 13, 2022

