அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க புகார் பெட்டி வைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடர்பான விவசாயிகளுடன் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ‘அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கபட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுப்பதற்கு ஒரு புகார் பெட்டி வைக்கப்படும். புகார் பெட்டியில் உள்ள மனு மீது வாரம் ஒரு முறை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பார். புகார் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் இலவச தொலைபேசி எண்கள் அடங்கிய பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டனர். இன்று நடந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, உணவு நுகர்வோர் மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

