இந்தியாசமூகம் - வாழ்க்கை

டெல்லி : விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் – கைது செய்து விசாரணை !

டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் பறிமுதல்

டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு டிராலி பைகளில் இருந்து சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வியட்நாம் நாட்டில் இருந்து  துப்பாக்கிகளை கடத்தி வந்த இந்திய தம்பதியினர் 2 பேர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சோதனையில் பிடிபட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுங்கத்துறை அதிகாரி, ‘பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் உண்மையானதா, இல்லையா ? என்பதை பாலிஸ்டிக்ஸ் அறிக்கை உறுதிப்படுத்தும். முதற்கட்ட அறிக்கையில், துப்பாக்கிகள் அனைத்தும் செயல்படும், பயன்படுத்த முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என சுங்கத்துறை அதிகாரி தெரிவித்தார். இதனால் டெல்லி விமான நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts