நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இளையராஜா
பல துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகின்றது. இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த ‘இசைஞானி இளையராஜாவை’ மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது. இசைத்துறையில் இளையராஜா செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் விதமாக இந்த பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட ‘இசைஞானி இளையராஜா’ அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள் !’ என்று புகழ்ந்து வலது தெரிவித்துள்ளார்.
இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட ‘இசைஞானி’ @ilaiyaraaja அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்! pic.twitter.com/zCqWAzA7RJ
— M.K.Stalin (@mkstalin) July 6, 2022

