அரசியல்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுமருத்துவம்

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் !

தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை பாதிப்பு

இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறி இருக்கிறதா என அதிகாரிகளால் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை எந்த மாவட்டத்திலும் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இதுவரை செஸ் போட்டிக்கு வந்த எந்த செஸ் விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படவில்லை. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தரும் வெளிநாட்டு செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவர். தமிழ்நாட்டில் குரங்கு அம்மை ஆய்வு மையம் அமைக்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் குரங்கு அம்மை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது’ என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts