உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
1 லட்சம் அபராதம்
சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியன் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளுக்கான வாடகை பாக்கி வசூலிக்க கோரி தனிநபரால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனிநபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த உத்தரவை ஹிந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், துறை சார்ந்த உதவி கமிஷனருக்கு. இணை கமிஷனர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரு வாரங்களில் அபராத தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

