மாமல்லபுரத்தில் ஒரே நேரத்தில் 700 போர்டுகளில் விளையாடக்கூடிய செஸ் ஒலிம்பியாட் அரங்கை நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பிரம்மாண்ட அரங்கு
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாமல்லபுரத்தில் தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மாமல்லபுரம் பூஞ்சேரியில் 22 ஆயிரம் சதுர அடியில் ஓரு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பூஞ்சேரி பகுதி முழுவதும் திருவிழா கோலத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். இதனால் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் பூஞ்சேரியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூருடன் சிறிது நேரம் செஸ் விளையாடி மகிழ்ந்தார். துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

