மருத்துவம்

இயற்கையாக கிடைக்கும் இருமல் மருந்துகள்!

நமது வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. பொதுவாக எல்லோருக்கும் வரக்கூடிய சளி மற்றும் வறட்டு இருமலை, இந்த பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு போக்குவது என இந்த கட்டுரையில் காணலாம்.

மஞ்சள் :

மஞ்சளில் இருக்கும் curcumin, antiviral, antibacterial மற்றும் anti-inflammatory தன்மை கொண்டது. சளியைப் போக்கி சிறப்பான நிவாரணம் தரும் மஞ்சள் வறட்டு இருமலையும் போக்கும் தன்மை கொண்டது.

ஒரு கோப்பைப் பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூளைச் சேர்த்து கொதிக்க விடவும். பொறுக்கும் சூட்டில் பருகவும்.

ஒரு துண்டு மஞ்சளை நெருப்பில் காட்டி, அதன் வாசத்தை நுகர்ந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

தேன் :

தேன் antiviral மற்றும் antibacterial தன்மை கொண்டது. அது சளியைக் கரைத்து வெளியேற்றுவதன் மூலம் இருமலை சரி செய்கிறது. மேலும் தேன் தொண்டை எரிச்சலைப் போக்குகிறது.

சுடான பாலில் ஒரு தேக்கரண்டி தேனைச் சேர்த்து இரவு படுக்கும் முன் பருகவும்.

3 மேசைக்கரண்டி flaxseeds-ஐ ஒரு கோப்பைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்த பின் நீரை வடிகட்டி அதனுடன் தலா 3 மேசைக்கரண்டி தேனும் எலுமிச்சை சாறும் கலந்து பருகவும்.

மிளகு :

மிளகுக்கு சளியைக் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. அதன் antibacterial தன்மைகளால் பாக்டீரியா தொற்றால் ஏற்படக் கூடிய சளி, இருமலைப் போக்குகிறது.

சுமார் அய்ந்து மிளகை எடுத்து பொடி செய்து அதனுடன் ஒரு மேசைக்கரண்டி தேன் சேர்த்து இரவு படுக்கும் முன் உண்ணவும்.

சுமார் அய்ந்து மிளகை பொடித்து, ஒரு கோப்பைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக சுண்டிய பின், வடிகட்டி சுவைக்காக சிறிது தேன் சேர்த்து பருகவும்.

இரண்டு அல்லது மூன்று மிளகை வாயில் போட்டு மெல்லவும்.

எலுமிச்சை :

எலுமிச்சை தொண்டையில் ஏற்படும் தொற்றுக்களைப் போக்க வல்லது. அதிலிருக்கும் Vitamin C, தொற்றுகளைப் போக்குவதோடு நோய் எதிர்க்கும் ஆற்றலையும் வளர்க்கிறது.

ஒரு எலுமிச்சைப் பழத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் ஒரு மேசைக்கரண்டி தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்துப் பருகவும்.

இஞ்சி :

இஞ்சியின் antiviral தன்மைகள் வைரல் தொற்றுகளால் ஏற்படும் இருமலைப் போக்குகிறது. இஞ்சியில் இருக்கும் gingerol, நாசிப் பாதையிலிருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது.

சுமார் ஒரு அங்குலம் அளவு இஞ்சியை எடுத்து நன்றாகக் கழுவி தோல் சீவி சற்றே நசுக்கவும். அதை ஒரு கோப்பைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பருகவும்.

Related posts