சமூகம்தமிழ்நாடு

சிறுமிடம் பாலியல் அடுத்துமீறலில் ஈடுபட்ட மதபோதகர் –  போக்சோவில் கைது ! 

கோவையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மதபோதகரை பொக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு.

சிறுமியிடம் அத்துமீறல் மதபோதகர் கைது

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் 17 வயது சிறுமி தனது தங்கையுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.  அதே பகுதியைச் சேர்ந்த மதபோதகர் ஸ்டீபன் ராஜ். அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜெபம் செய்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது  சிறுமி கூச்சலிட்டதால் ஸ்டீபன் ராஜ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். சிறுமி இது குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதபோதகர் ஸ்டீபன் ராஜ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தினர்.

Related posts