ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
ஓபிஎஸ்க்கும் திமுகவிற்கு தொடர்பு
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததே திமுகவுக்கு எதிராகத்தான், ஆனால், தீய சக்தியான திமுக உடன் கைகோர்க்கும் வண்ணம் ஓ.பி.எஸ் நடவடிக்கைகள் இருந்தன. ஓ.பி.எஸ் நடவடிக்கைகளை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக எதிர்ப்பில் எம்.ஜி.ஆர் இறுதிவரை உறுதியாக இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் மகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன் ? கட்சியினரிடையே இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்களின் தீர்ப்பே இறுதியானது. பொதுக்குழுவில் முடிந்தால் ஓ.பி.எஸ் பலத்தை காட்டட்டும். ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஐந்து சதவீதம் உறுப்பினர்கள் ஆதரவு கூட இல்லாமல் கட்சியை கட்டுப்படுத்த நினைப்பது தவறானது. இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கும் வகையில் ஓ.பி.எஸ் செயல்படுகிறார். அவரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓ.பி.எஸ் கருத்து தவறாக இருக்கிறது ஆகவே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஓ.பன்னீர் செல்வம், திமுகவின் பீ டீமாக இருந்தால் தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள்.

