சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனை
சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக டிவிட்டரில் தொடர்ந்து கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரியாத் பகுதியை சேர்ந்த சல்மா அல் செஹாப் என்பவர் டிவிட்டர் மூலம் சவுதி அரசுக்கு எதிரான செய்திகளை பகிர்ந்து வந்தார். இந்த செயல் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க முயன்றதாக கூறி சல்மா அல் செஹாப் மீது சவுதி அரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சமீபத்தில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், சல்மா அல் செஹாப்புக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

