குளச்சல் மீன்பிடி துறைமுகங்களில் மலை போல் குவிந்த கொழிசாளை மீன்கள்.
மீன்பிடி துறைமுகம்
குளச்சல், மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 60 நாட்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். துறைமுகங்களுக்கு வந்த விசைப்படகுகளில் டண் கணக்கில் “கொழி சாளை” மீன்கள் பிடிப்பட்டிருந்தன. இந்த மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் துறைமுகங்களில் மலை போல் குவித்து வைத்திருந்த நிலையில் மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த மீன்களை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு கிலோ கொழி சாளை மீன் சாதாரணமாக 60 ரூபாய் வரை விலை போகும் நிலையில் இன்று ரூ 20 ரூபாய்க்கு விலை போனது.

