தூத்துக்குடி அருகே காரில் சென்ற இரும்புகடை ஊழியரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த மர்மநபர்கள்.
10 லட்சம் கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார்(40). இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு இரும்புக் கடையில் வேலை பார்த்து வருகிறார். உடன்குடி தேரியூரில் உள்ள இரும்புக்கடையில் வசூல் பணம் 10 லட்சம் ரூபாயை வாங்கி கொண்டு செந்தில்குமார் காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது 2 பேர் காரை வழிமறித்தனர். காரை விதிமுறைகளை மீறி ஓட்டி செல்வதாக செந்தில்குமாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அப்போது காரின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த வசூல் பணம் 10 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

