தமிழ்நாடு

தமிழக பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் – திருப்பதிக்கு மீண்டும் தினசரி ரயில்!

திருப்பதி டு காட்பாடி இடையே தினந்தோறும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.

தினந்தோறும் முன்பதிவில்லா ரயில்

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து, தினமும் காலை 10:55 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:30 மணிக்கு, வேலுார் மாவட்டம் காட்பாடி சென்றடையும். காட்பாடியில் இருந்து, இரவு 9:55 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:50 மணிக்கு திருப்பதி சென்றடையும். விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறைக்கு, வரும் 11ம் தேதி முதல், முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும் தினசரி மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில் இரவு 11 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது. அதேப்போல் அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் விரைவு ரயில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது என சென்னை ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Related posts