அரசியல்தமிழ்நாடு

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட வாய்ப்பு !

அதிமுகவில் இடைக்கால பொது செயலாளர் பொறுப்பு வரும் 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படவுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் ?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஜூன் 23ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி அக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் பொதுசெயலாளர் பதவி உருவாக்குவதற்கான தீர்மானம் இல்லாததால் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவுக்கு தடை பெற ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கான அழைப்பிதழை தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் அனுப்பி, கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த இ.பி.எஸ் தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Related posts