கண்டெய்னர் லாரிகள் 2ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளது.
கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்
சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், வாடகையை உயர்த்தி தரக்கோரி வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் சரக்குகளை கொண்டு செல்லும் பணியில், 5000-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை தற்போது வரை உயர்த்தி தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டைவிட தற்போது டீசல் விலை 100 ரூபாயைக் கடந்தது விற்பனையாவதாகவும் கூறும், கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இன்சூரன்ஸ், எப்.சி., உதிரி பாகங்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, தங்களுக்கு வாடகையை உடனடியாக உயர்த்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

